Monday, June 4, 2012

*********************** இப்போதும் அடிக்கடி உன் நினைவுகள் எழும், சில் மிஷங்களும் பரிமாறல்களும் என்னை அறியாமலேயே உதட்டில் புன்னகையைத் தோற்றுவிக்கும், வீதியில் போகும் போது நான் அடிக்கடி சிரிப்பதாக தெரிந்தவர்கள் கூறுவார்கள் காரணம் இதுவாகவும் இருக்கலாம், நானும் பலர் தன் பாட்டிற் சிரிப்பதை வீதிகளில் கண்டிருக்கிறேன் அவர்களுக்கும் இது தான் காரணமோ தெரியவில்லை, ஆனாலும் கடந்த காலங்களைப்போல அந்தச் சிரிப்புக்கு பின்னர் எழுவதான ’கண்ணீரும் மனச்சோர்வும்’ இப்போது இல்லை என்றே கூறுவேன், ஆயினும் உன் நினைவுகள் அடிக்கடி எழும் ஏதோ எழுதுவேன் மெளனமாவேன்.. ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++++++++ எத்தனை முறை வேண்டுமானாலும் குழந்தையாகலாம் உன் மடி கிடைக்கும் என்றால்... சொர்கத்தில் இருக்கும் என் காதலைத்தான் உனக்கு கவிதையாய் தருகிறேன் அதை நீ தெரிந்தோ தெரியாமலோ கிழித்தெறிந்து சாகடித்துவிடுகிறாய்... +++++++++++++++++++++++++++++++++++ உன்னை பார்த்த முதல் கணமே, உன் அனுமதியின்றி காதல் செய்தேன் ... உன் மீன் போன்ற விழிகளால் வலை விரிக்கப்பட்டு ,வீழ்த்தப்பட்டேன்... உன்னை காணுவதற்காக என் கால்களை வேலை வாங்கினேன் ... இமை மூட பயந்தேன் , . நிமிடங்களை கணக்கிட்டு செலவு செய்தேன்... உன்னை பார்த்த நிமிடங்களை , பொக்கிஷமாய் நெஞ்சில் புதைத்தேன்.. உன்னை காணாத நொடிகளை, நகர்த்த முயற்சி செய்தேன்... உன் முன் மௌனமாகும் உதடுகளை விட்டு, கண்கள் மூலம் காதலை சொல்ல முயன்றேன் ... என் காதல் உனக்கு புரிந்ததா? இல்லையா? என்று எண்ணி நித்திரை தொலைத்தேன் .. நிஜங்களை வெறுத்தேன், கனவுகளை நம்பினேன்.. இப்படி உன்னால் உண்ணாமல் திரிந்தேன், உன்னில் உயிராக வாழ ... உன்னை விட்டு பிரிய போகிறேன் உன் அனுமதியின்றி கண்ணீருடன் , உன் நினைவுகளை உன்னிடம் கடனாக பெற்று.. .காரணம் கேட்காதே ... இது விதியின் வஞ்சனை,. ....................................................................................